< Back
மாநில செய்திகள்
பேரம்பாக்கம் அருகே மின்சாரம் தாக்கி பெண் சாவு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பேரம்பாக்கம் அருகே மின்சாரம் தாக்கி பெண் சாவு

தினத்தந்தி
|
28 Aug 2023 3:07 PM IST

பேரம்பாக்கம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.

மழை

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்த திருப்பந்தியூர் கிராமம், கன்னியம்மன் நகரை சேர்ந்தவர் நிர்மலா (வயது 52). இவரது கணவர் அரிகிருஷ்ணன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நல குறைவு காரணமாக இறந்து போனார். தற்போது நிர்மலா தனது தாயார் கமலா (80), மகள் ஐஸ்வர்யா (21) ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அப்போது மழை மற்றும் பலமாக வீசிய காற்றின் காரணமாக நிர்மலா வீட்டின் எதிரே இருந்த மின் கம்பத்தில் இருந்து மின்கம்பி அறுந்து அவரது இரும்பு கேட்டின் மீது விழுந்து கிடந்தது. இதை கவனிக்காத நிர்மலா நேற்று கேட்டை திறந்து வெளிய வர முயன்றார்.

சாவு

அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து நிர்மலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்