< Back
மாநில செய்திகள்
மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
திருவாரூர்
மாநில செய்திகள்

மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

தினத்தந்தி
|
21 Aug 2023 6:45 PM GMT

மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

வலங்கைமான் சிங்குநகரை சேர்ந்தவர் முகமது சலீம். இவரது மனைவி ரஹமதுநிஷா(வயது55). நேற்றுமுன்தினம் இவர் தனது மகன் பயாஸ் (22) என்பவருடன் மோட்டார்சைக்கிளில் கோட்டூர் அருகே உள்ள ராயநல்லூரில் தனது உறவினர் புதுமனை புகுவிழாவிற்கு வந்தார். விழா முடிந்து ஊருக்கு சென்று கொண்டிருந்த போது, ஆதிச்சபுரம் என்ற இடத்தில் சாலையில் இருந்த பள்ளத்தில் மோட்டார்சைக்கிள் இறங்கி ஏறியது. இதில் நிலைதடுமாறி மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ரஹமது நிஷா படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்