< Back
மாநில செய்திகள்
தெருநாய்கள் துரத்தியதால் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
மாநில செய்திகள்

தெருநாய்கள் துரத்தியதால் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

தினத்தந்தி
|
19 Feb 2024 11:30 PM IST

தவறி விழுந்து படுகாயம் அடைந்த பெண் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்வழியில் பரிதாபமாக இறந்தார்.

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பண்டிட் சுப்புராஜா தெருவை சேர்ந்தவர் சரசுவதி (வயது 63). இவருடைய மகன் வினோத். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சங்கரன்கோவில் சாலையில் உள்ள எம்.ஆர்.நகர் பகுதியில் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது கூட்டமாக நின்றிருந்த தெருநாய்கள் ஓடிவந்து, குரைத்துக்கொண்டே மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை துரத்தின.

இதனால் தாய், மகன் பதற்றம் அடைந்தனர். நாய்களின் அச்சுறுத்தலால் சரசுவதி திடீரென கீழே விழுந்தார். முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார்.உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிவந்து நாய்களை விரட்டினர். சிகிச்சைக்காக சரசுவதி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்