ராணிப்பேட்டை
வாகனம் மோதி பெண் சாவு
|காவேரிப்பாக்கம் அருகே வாகனம் மோதி பெண் பலியானார்.
காஞ்சீபுரம் மாவட்டம், வையாவூர் கிராமத்தை சேர்ந்த சூர்யா என்பவரின் மனைவி தனவர்த்தினி (வயது 23). இவர், காஞ்சீபுரத்தில் கவரிங் நகைக்கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு காஞ்சீபுரத்தை ேசர்ந்த தனது தோழியான மேகலாவுடன் ஸ்கூட்டரில் ராணிப்பேட்டைக்கு சென்று கடைக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்துள்ள துரைபெரும்பாக்கத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் ஸ்கூட்டர் மீது மோதியதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் காவேரிப்பாக்கம் போலீசார் அங்கு சென்று படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தனவர்த்தினி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மேகலாவை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.