< Back
மாநில செய்திகள்
வேன் மோதி பெண் பலி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

வேன் மோதி பெண் பலி

தினத்தந்தி
|
26 Oct 2022 12:30 AM IST

வேன் மோதி பெண் பலியானார்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்தவர் முருகன் (வயது 63). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி திலகம் (55). இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சோழவந்தானுக்கு சென்றனர். திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலை பள்ளப்பட்டி பிரிவு போலீஸ் சோதனைச் சாவடி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முருகன், திலகம் ஆகியோருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி திலகம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


----.


மேலும் செய்திகள்