< Back
மாநில செய்திகள்
கடன் தொல்லையால் பெண் தற்கொலை
சேலம்
மாநில செய்திகள்

கடன் தொல்லையால் பெண் தற்கொலை

தினத்தந்தி
|
6 Dec 2022 1:00 AM IST

கடன் தொல்லையால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சூரமங்கலம்:-

சேலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி மீன்வாயன் தெரு பகுதியை சேர்ந்தவர் உமா (வயது 44). இவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் குடும்ப செலவுக்காக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் உமா கடன் வாங்கியதாகவும், ஆனால் பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை. அவருக்கு கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி பணம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது, இதனால் மனமுடைந்து போன அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்