< Back
மாநில செய்திகள்
மாட்டு கொட்டகையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தர்மபுரி
மாநில செய்திகள்

மாட்டு கொட்டகையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தினத்தந்தி
|
27 Feb 2023 1:00 AM IST

காரிமங்கலம்:-

காரிமங்கலம் அருகே குடும்ப பிரச்சினையில் மாட்டு கொட்டகையில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப பிரச்சினை

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த நாகணம்பட்டி ஊராட்சி சவுளுக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மனைவி ரம்யா (வயது 30). இவர்களுக்கு சரவணன், அசோக் என 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன்- மனைவி இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ரம்யா மனம் உடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாட்டு கொட்டகையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணை

அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், ரம்யா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டதாக தெரிகிறது. தகவல் அறிந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு திரண்டனர். ரம்யா உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்கசெய்தது. தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாட்டு கொட்டகையில் பிணமாக தொங்கிய ரம்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ரம்யா தற்கொலை தொடர்பாக காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்