< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
|28 Jun 2022 12:53 AM IST
தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
வடகாடு:
வடகாடு அருகே உள்ள கடுக்காகாடு பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியமேரி(வயது 31). இவரது கணவர் குழந்தைபர்னாந்து. இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்த குழந்தை பர்னாந்து கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவர் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் வீட்டு உத்திரத்தில் தூக்குப்போட்ட நிலையில் ஆரோக்கியமேரி பிணமாக தொங்கினார். இது குறித்து ஆரோக்கியமேரியின் அண்ணன் தாமஸ் கொடுத்த புகாரின்பேரில், வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியமேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.