< Back
மாநில செய்திகள்
பெண் தூக்குப்போட்டு தற்கொலை
அரியலூர்
மாநில செய்திகள்

பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
5 Jun 2022 1:14 AM IST

பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள இடையார் கல்லாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார்(வயது 30). விவசாயி. இவரும் அதே பகுதியில் வசிக்கும் சங்கீதாவும் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. சங்கீதாவுக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வயிற்று வலி தாங்க முடியாமல் வீட்டில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்