< Back
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தினத்தந்தி
|
19 May 2022 7:36 PM IST

ஆரணி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

ஆரணி

ஆரணியை அடுத்த பையூர் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியம் என்பவரின் மகள் ஜெனிபர் (வயது 33). இவருக்கும் சக்திராஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். சக்திராஜ் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

தாய் வீட்டில் உள்ள ஜெனிபர் உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

மேலும் குடும்பத்தகராறு காரணமாகவும் மன விரக்தி அடைந்த அவர் இன்று அதிகாலை வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பாக்கியம் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபூதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
மேலும் செய்திகள்