கன்னியாகுமரி
நாகர்கோவிலில் மகள் இறந்த துக்கத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை
|நாகர்கோவிலில் மகள் இறந்த துக்கத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் மகள் இறந்த துக்கத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி மனைவி
நாகர்கோவில் கேசவதிருப்பாபுரம் விவேகானந்தா் தெருவை சேர்ந்தவர்அய்யா பழம் (வயது 57), தொழிலாளி. இவருடைய மனைவி சரஸ்வதி (54). இவர்களுடைய மகனுக்கு திருமணமாகி மனைவி, குழந்தையுடன் அருகே வசித்து வருகிறார். மகள் சரண்யா கடந்த 5 மாதங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் சரஸ்வதி மனவேதனையில் இருந்து வந்தார். மேலும் உறவினர்கள் யாருடனும் பேசாமலும் இருந்துள்ளார்.
விஷம் குடித்து தற்கொலை
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகள் இறந்த துக்கத்தில் சரஸ்வதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் சரஸ்வதி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கு முன்னதாக ஏற்கனவே ஒருமுறை சரஸ்வதி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.