< Back
மாநில செய்திகள்
குடும்ப தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

குடும்ப தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
13 Oct 2023 2:35 PM IST

குடும்ப தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் சின்னகளக்காட்டூர் ஊராட்சியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45). கூலி தொழிலாளி. இவருக்கு காயத்ரி (40) என்ற மனைவியும், இரண்டு மகள்களும் இருந்தனர்.

இவருடைய மூத்த மகள் பவித்ரா திருமணம் முடிந்து காஞ்சீபுரத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் பவித்ராவிற்கு நேற்று முன்தினம் குழந்தை பிறந்தது.

குழந்தை பெற்றுள்ள தனது மகளை பார்க்க வேண்டும் என காயத்ரி கணவரிடம் தெரிவித்தார். மேலும் தன்னுடன் காஞ்சீபுரத்திற்கு வரும்படி வெங்கடேசனை அழைத்தார்.

அப்போது காயத்ரிக்கும்- வெங்கடேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவருத்தத்தில் இருந்த காயத்ரி கணவர் வேலைக்கு சென்று இருந்த நேரத்தில் அரளி இலையை (விஷ செடி) சாப்பிட்டு வீட்டில் மயங்கினார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் காயத்ரியை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு காயத்ரிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்