கடலூர்
விஷம் குடித்து பெண் தற்கொலை
|கடலூரில் தனது மகனின் படிப்பு செலவுக்கு பணம் இல்லாததால் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நாராயணன்நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மனைவி வைரம் (வயது 48). இவர்களது மகன் மணிந்தர், பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்.பி.பி.எஸ். 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது படிப்பு செலவுக்கு ரூ.7 லட்சம் தேவைப்படுவதால், அதை தயார் செய்ய முடியாமல் வைரம் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது.
விஷம் குடித்தார்
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வைரம் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றி அண்ணாதுரை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.