கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை; திருமணமான ஒரு ஆண்டில் விபரீத முடிவு
|கள்ளக்குறிச்சி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
கள்ளக்குறிச்சி அருகே அகரக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை மகன் ஜெயப்பிரகாஷ் (வயது 30). இவருக்கும் சங்கராபுரம் தாலுகா சாத்தபுத்தூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகள் ராதா (28) என்பவருக்கும் இடையே, ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், ராதாவுக்கு அடிக்கடி வயிற்றுவலி வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும், அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த அவர் வயலுக்கு அடிக்க வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதில் மயங்கி விழுந்த, ராதாவை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக குடும்பத்தினர் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்து விட்டார். இது குறித்து ராதாவின் தந்தை பெரியசாமி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.