< Back
மாநில செய்திகள்
நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் தீவிபத்து புகைமூட்டத்தில் சிக்கிய பெண் பத்திரமாக மீட்பு
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் தீவிபத்து புகைமூட்டத்தில் சிக்கிய பெண் பத்திரமாக மீட்பு

தினத்தந்தி
|
4 March 2023 12:15 AM IST

வந்தவாசியில் நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் புகைமூட்டத்தில் சிக்கிய அவரது மனைவியை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

வந்தவாசி

வந்தவாசியில் நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் புகைமூட்டத்தில் சிக்கிய அவரது மனைவியை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

வந்தவாசி சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. நிதி நிறுவன உரிமையாளர். இவரது மனைவி சுப்புலட்சுமி, வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வீடு திரும்பியபோது புகை மூட்டமாக இருந்தது.உள்ளே சென்ற அவர் புகைமூட்டத்தில் சிக்கியதால் வெளியே வர முடியாமல் தவித்தார்.

தகவல் அறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து சென்று சுப்புலட்சுமி மற்றும் அவரது வளர்ப்பு நாயை மீட்டு பக்கத்து வீட்டு மாடியின் வழியாக வெளியே கொண்டு வந்தனர்.

எனினும் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்