< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
பெண்ணை அரிவாளால் தாக்கி 5½ பவுன் சங்கிலி பறிப்பு
|28 April 2023 12:04 AM IST
பெண்ணை அரிவாளால் தாக்கி 5½ பவுன் சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது.
கரூர் ஆத்தூர் பிரிவு அம்மன் நகரை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 46). இவர் தனது மருமகள் ஜெயகவியுடன் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் சரஸ்வதியை அரிவாளால் தாக்கி அவரது கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் சங்கிலியை பறித்து சென்றார். மர்மநபர் அரிவாளால் தாக்கியதில் காயம் அடைந்த சரஸ்வதியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் வழக்குப்பதிந்து, சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்.