< Back
மாநில செய்திகள்
சொத்து தகராறில் அண்ணனை உயிருடன் எரித்துக்கொல்ல முயன்ற பெண் கைது
சென்னை
மாநில செய்திகள்

சொத்து தகராறில் அண்ணனை உயிருடன் எரித்துக்கொல்ல முயன்ற பெண் கைது

தினத்தந்தி
|
20 March 2023 10:22 AM IST

சொத்து தகராறில் அண்ணனை உயிருடன் எரித்துக்கொலை செய்ய முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

உடலில் தீப்பிடித்து எரிந்தது

சென்னை பெரம்பூர், சபாபதி தெருவைச் சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது 63). இவருடைய மனைவி அமுலு. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அமுலு, மனநிலை பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதமாக ஆந்திர மாநிலம், புத்தூரில் சிகிச்சை பெற்று வருகிறார். முனிரத்தினம் தனது சொந்த வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வருகிறார். அதே வீட்டின் கீழ் தளத்தில் உள்ள மற்றொரு வீட்டில் அவருடைய தங்கை தனலட்சுமியும், மேல் தளத்தில் உள்ள வீட்டில் மற்றொரு தங்கை பாக்கியலட்சுமியின் கணவர் தாமோதரன், தனது மகனுடனும் வசித்து வருகிறார்.

நேற்று அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த முனிரத்தினத்தின் உடலில் தீப்பிடித்து எரிந்தது. வலியால் அவர் அலறினார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்தனர்.

சொத்துத்தகராறு

இதுபற்றி தகவல் அறிந்து வந்த திரு.வி.க நகர் போலீசார், 90 சதவீத தீக்காயத்துடன் இருந்த முனிரத்தினத்தை மீட்டு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சொத்துத்தகராறு காரணமாக தனலட்சுமி, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தனது சொந்த அண்ணன் முனிரத்தினம் மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் எரித்துக்கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தனலட்சுமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்