< Back
மாநில செய்திகள்
சொத்து வரி வசூலிக்க சென்ற பேரூராட்சி ஊழியர்களை மிரட்டிய பெண் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

சொத்து வரி வசூலிக்க சென்ற பேரூராட்சி ஊழியர்களை மிரட்டிய பெண் கைது

தினத்தந்தி
|
30 April 2023 2:51 PM IST

சொத்து வரி வசூலிக்க சென்ற பேரூராட்சி ஊழியர்களை மிரட்டிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் தலைமையில் ஊழியர்கள் பல்வேறு பிரிவுகளாக வீடு, வீடாக சென்று சொத்து வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 19-ந்தேதி ஆரணி அத்திக்குளம் பகுதியை சேர்ந்த நாகலட்சுமியிடம் (வயது 37) சொத்து வரியை செலுத்துமாறு பேரூராட்சி அலுவலக ஊழியர்களும் கேட்டனர். நாகலட்சுமி அவர்களிடம் தகராறு செய்து பணிசெய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் நாகலட்சுமி மீது ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகலட்சுமியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்