< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
திருநின்றவூரில் வங்கியில் மூதாட்டியின் நகையை திருடிய பெண் கைது
|16 Sept 2022 5:03 PM IST
திருநின்றவூரில் வங்கியில் மூதாட்டியின் நகையை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருநின்றவூர் பெரியார் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சம்பூரணம் (வயது 70). இவர் தன்னுடைய கணவர் விஸ்வநாதனுடன் திருநின்றவூர் சி.டி.எச் சாலையில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று 2 பவுன் நகையை அடகு வைத்தார். பின்னர் முக்கால் பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை கைப்பையில் வைத்திருந்தார். சிறிது நேரத்தில் அவர் அருகில் வைத்து இருந்த நகை மற்றும் பணம் இருந்த பை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செயதனர்.
அதில் பெண் ஒருவர், சம்பூரணத்தின் நகையை திருடிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சியை வைத்து திருநின்றவூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த விஜயசாந்தி (52) என்ற பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.