< Back
மாநில செய்திகள்
உண்டியல் காணிக்கை எண்ணியபோது பணம் திருடிய பெண் கைது
தென்காசி
மாநில செய்திகள்

உண்டியல் காணிக்கை எண்ணியபோது பணம் திருடிய பெண் கைது

தினத்தந்தி
|
14 July 2023 12:15 AM IST

சங்கரன்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணியபோது பணம் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் வழக்கமாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் ஈடுபடுவது வழக்கம். இந்த பணியின்போது அதை வீடியோவில் பதிவு செய்யப்படும். இந்த நிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும்போது வீடியோவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, ஒரு பெண் ரூபாயை எடுத்து மறைத்து வைத்தது தெரியவந்தது.

இதுகுறித்த கோவில் உதவியாளர் நல்லமணி சங்கரன்கோவில் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், ராஜபாளையத்தை சேர்ந்த அழகுராஜா மனைவி ரத்னம் என்பவர் காணிக்கை பணம் ரூ.1,000-ஐ திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


மேலும் செய்திகள்