நீலகிரி
நகை திருடிய பெண் கைது
|ஊட்டியில் வீட்டுக்குள் புகுந்து நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
ஊட்டி ஸ்டோன் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் கிரிஜா தேவி. இவர் கடந்த 30-ந் தேதி ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து, 5 பவுன் நகையை கழற்றி பீரோவில் வைத்துள்ளார். இந்தநிலையில் நேற்று மீண்டும் ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக பீரோவில் இருந்த நகையை எடுக்க சென்றார். அப்போது நகை காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து கிரிஜா தேவி ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் வனக்குமார் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த சுசிலா (வயது 35), கிரிஜா தேவி வீட்டுக்கு கடந்த வாரம் வந்து சென்றது தெரியவந்தது. பின்னர் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். வாங்கி கடனை அடைப்பதற்காக நகை திருடியதை சுசிலா ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, ஊட்டி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ஊட்டியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மகளிர் விடுதியில் சுசிலா சமையல் பணியாளராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.