< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
கோவில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் நகை திருடிய பெண் கைது
|6 Oct 2023 1:30 AM IST
கோவில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
கொண்டலாம்பட்டி:-
சேலம் கொண்டலாம்பட்டி அருகே சிவதாபுரம் முத்துநாயக்கர் காலனியைச் சேர்ந்தவர் பார்வதி (வயது 65). இவர், சிவதாபுரம் மொரம்பு காட்டில் பச்சை பட்டினி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டார். அப்போது பார்வதியின் தங்க சங்கிலி மாயமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பார்வதியிடம் நகை திருடியது மதுரை சித்திவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த மதன் மனைவி லட்சுமி (29) என்பது தெரிய வந்தது. உடனே போலீசார் மீனாவை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.