< Back
மாநில செய்திகள்
செல்போன் திருடிய பெண் கைது
திருச்சி
மாநில செய்திகள்

செல்போன் திருடிய பெண் கைது

தினத்தந்தி
|
4 Nov 2022 3:46 AM IST

செல்போன் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

சமயபுரம்:

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள ஒருங்கிணஞ்சேரி பகுதியை சேர்ந்த சந்திரசேகரின் மகள் ஆனந்தி(வயது 24). இவர், சமயபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பயணிகளிடம் நைசாக பேசி அவர்களிடம் இருந்து செல்போன்களை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்த புகார்களின் பேரில் அவரை பிடிக்க சமயபுரம் போலீசார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று சமயபுரம் அருகே உள்ள மாகாளிகுடியில் திவாகர் என்பவர் வீட்டில் செல்போனை ஆனந்தி திருடியதாக கூறப்படுகிறது. அப்போது, ஆனந்தியை அங்கிருந்தவர்கள் கையும், களவுமாக பிடித்து சமயபுரம் போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தார்.

மேலும் செய்திகள்