< Back
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் கடத்திய பெண் கைது
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

புகையிலை பொருட்கள் கடத்திய பெண் கைது

தினத்தந்தி
|
22 Sept 2023 1:20 AM IST

திருக்கோவிலூர் அருகே புகையிலை பொருட்கள் கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் செட்டித்தாங்கள் பஸ் நிலைய பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி கனகா (வயது 50) என்பதும், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்