< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
ஆட்டோவில் கஞ்சா கடத்திய பெண் கைது
|22 Sept 2022 3:19 PM IST
ஆட்டோவில் கஞ்சா கடத்திய பெண்ணை கைது செய்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உதவி கமிஷனர் பாஸ்கர் மேற்பார்வையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது ஆட்டோ ஒன்றை மடக்கி சோதனை போட்டனர். அதில் பெண் ஒருவர் பயணித்தார்.
சந்தேகத்தின்பேரில் அந்த பெண் வைத்திருந்த பையை திறந்து பார்த்தனர். அதற்குள் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. உடனே அந்த பெண் பிடிபட்டார்.
இதை பார்த்து, ஆட்டோவை பின்தொடர்ந்து ஸ்கூட்டரில் வந்த வாலிபர், திடீரென்று ஸ்கூட்டரை திருப்பி தப்பி ஓடினார். போலீசார் அவரையும் மடக்கிப்பிடித்து சோதனை போட்டனர். அவரும் ஒரு பையில் கஞ்சா வைத்திருந்தார். இருவரிடமும் 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆட்டோவில் வந்த பெண்ணின் பெயர் குல்னாஸ் (வயது 34). ஸ்கூட்டரில் வந்தவர் பெயர் ரகுமான் (24). திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.