கன்னியாகுமரி
கடையில் திருடிய பெண் கைது
|பொருட்கள் வாங்குவது போல் நடித்து கடையில் திருடிய பெண் கைது
களியக்காவிளை,
களியக்காவிளை ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் நிர்மலா (வயது 60). இவர் களியக்காவிளை சந்திப்பில் பெட்டி கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு நேற்று முன்தினம் ஒரு பெண் பொருட்கள் வாங்க வந்தார். அவர் பொருட்களை வாங்குவது போல் விலைகளை கேட்டவாறு இருந்தார். அப்போது நிர்மலர் தண்ணீர் எடுப்பதற்காக கடையின் அருகே உள்ள பகுதிக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அந்த பெண்ணை காணவில்லை. அத்துடன் கடையில் இருந்த நிர்மலாவின் பேக் மாயமாகி இருந்தது. அந்த பேக்கில் ரூ.60 ஆயிரம் மற்றும் ஆதார் கார்டு போன்றவை இருந்தன.
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, பேக்கை அந்த பெண் திருடி சென்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் களியக்காவிளை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி பேக்கை திருடியதாக பாறசாலையை அடுத்த புத்தன்கடை நெடுவான்விளையை சேர்ந்த வனஜா (46) என்பரை ைகது செய்தனர். இவர் மீது பாறசாலை போலீஸ் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.