< Back
மாநில செய்திகள்
மதுரவாயலில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி செய்த பெண் கைது
சென்னை
மாநில செய்திகள்

மதுரவாயலில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி செய்த பெண் கைது

தினத்தந்தி
|
23 Jun 2023 10:30 PM IST

மதுரவாயலில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

மதுரவாயலை சேர்ந்தவர் இந்துமதி(35), இவர் மதுரவாயல் பகுதியில் உள்ள நகை அடகு வைத்து பணம் தரும் தனியார் நிறுவனத்தில் இந்த மாதம் 5 ம் தேதி முதல் சிறுக, சிறுக நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். இந்நிலையில் இந்துமதி அடிக்கடி வந்து நகைகள் வைத்து விட்டு பணம் வாங்கி சென்றதால் சந்தேகம் அடைந்த தனியார் பைனான்ஸ் ஊழியர்கள் அவர் வைத்த நகைகளை ஆய்வு செய்த போது நகைகள் அனைத்தும் கவரிங் நகைகள் என தெரியவந்தது. மேலும் அவர் இதுவரை கவரிங் நகைகளை வைத்து ரூ.17 லட்சம் வரை பணத்தை பெற்றது தெரியவந்தது. இது குறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளித்த நிலையில் மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்துமதியை கைது செய்து விசாரித்த போது தனது கணவரின் உதவியுடன் வேறு ஒரு நபர் கொடுத்த கவரிங் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றதாக தெரிவித்தார். மேலும் தனியார் நகை பைனான்ஸ் ஊழியர்களுக்கு சந்தேகம் வராத வகையில் கவரிங் நகைகளை அதற்கு ஏற்றார் போல் சீல் அச்சிட்டு கவரிங் நகைகளை வைத்து பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்துமதியை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள அவரது கணவர் மற்றும் இந்த சம்பவத்திற்கு மூல காரணமாக இருந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்