< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
வியாசர்பாடியில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த பெண் கைது
|15 Jun 2022 7:56 AM IST
வியாசர்பாடியில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
வியாசர்பாடி கரிமேடு 1-வது தெருவை சேர்ந்தவர்கள் சுகன்யா (வயது 43) மற்றும் வேளாங்கண்ணி. இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் 2018-ம் ஆண்டு முதல் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். அவர்களிடம் அதே பகுதியை சேர்ந்த கலைச்செல்வி (43) என்ற பெண் ரூ.6 லட்சத்து 18 ஆயிரம் கட்டி உள்ளார். மேலும், பணத்தை திரும்ப கேட்டபோது பணத்தை தராமல் நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்ததுள்ளனர். இதுகுறித்து கலைச்செல்வி மற்றும் பணம் கட்டி ஏமாந்த 25-க்கும் மேற்பட்ட பெண்கள் எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த வழக்கில் சுகன்யாவை போலீசார் கைது செய்தனர். வேளாங்கண்ணி பணத்துடன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.