< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
வீடு புகுந்து நகை திருடிய பெண் கைது
|4 Sept 2023 1:15 AM IST
திண்டுக்கல்லில் வீடு புகுந்து நகை திருடிய பெண்ணை கைது செய்தனர்.
திண்டுக்கல் பழைய கரூர் சாலையில், ஜி.எஸ்.நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). கார் டிரைவர். நேற்று முன்தினம் அவரது வீட்டில் யாரும் இல்லாதபோது, பெண் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் வைத்திருந்த 2½ பவுன் நகையை திருடி கொண்டிருந்தார். அப்போது அங்கு மணிகண்டன் வந்ததால், அந்த பெண் கையும், களவுமாக சிக்கினார். பின்னர் அந்த பெண்ணை மணிகண்டன் திண்டுக்கல் தாலுகா போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண், கரூர் வெங்கம்மேடு பகுதியை சேர்ந்த தர்மராஜ் மனைவி ரமணி (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.