< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
மது விற்ற பெண் கைது
|8 May 2023 12:15 AM IST
இண்டூர் அருகே மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பாப்பாரப்பட்டி
இண்டூர் அருகே உள்ள பேடரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாலதி (வயது 36). இவர் பேடரஅள்ளி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று மது விற்று கொண்டிருந்த மாலதியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 26 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.