< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

தினத்தந்தி
|
27 Dec 2022 12:30 AM IST

மயிலாடுதுறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மயிலாடுதுறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா விற்பனை

மயிலாடுதுறையில் உள்ள பிரதான பஸ் நிலையமான காமராஜர் பஸ் நிலையத்தின் பின்புறம் பெண் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. தகவலையடுத்து மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரிடம், 1 கிலோ 100 கிராம் அளவில் இருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த பெண், மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த பகத்சிங் மனைவி செல்வி (வயது 30) என்பது தெரியவந்தது.

சிறையில் அடைப்பு

இதனையடுத்து கைது செய்யப்பட்ட செல்வி மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவாரூரில் உள்ள பெண்களுக்கான சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்