< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகேவிஷம் குடித்து பெண் தற்கொலை
|28 April 2023 12:30 AM IST
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே பாலதொட்டனப்பள்ளியை சேர்ந்தவர் மல்லேஷ். இவருடைய மனைவி உமா (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் உமா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார்.
இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர், கடந்த 22-ந் தேதி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.