< Back
மாநில செய்திகள்
ஊர்வலமாக சென்ற உறவினர்கள் 12 பேர் கைது
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

ஊர்வலமாக சென்ற உறவினர்கள் 12 பேர் கைது

தினத்தந்தி
|
31 Aug 2023 1:50 AM IST

கும்பகோணத்தில் நர்சு சாவில் மர்மம் உள்ளதாக கூறி ஊா்வலமாக சென்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம்;

கும்பகோணத்தில் நர்சு சாவில் மர்மம் உள்ளதாக கூறி ஊா்வலமாக சென்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாலை மறியல்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த மணலூர் திருமாந்துறை தோப்புத்தெரு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவருடைய மகள் வைஷ்ணவி (வயது 22). இவர், நர்சிங் படித்து முடித்து விட்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து செவிலியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவா் ஆஸ்பத்திரியில் உள்ள தங்கும் அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.இதனால் அதிர்ச்சி அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள், கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், வைஷ்ணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த வைஷ்ணவியின் உறவினர்கள், அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். மேலும் வைஷ்ணவி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள், ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆஸ்பத்திரி முன்பு ஆர்ப்பாட்டம்

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.இதன் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் வைஷ்ணவி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி முன்பு வரது உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.

12 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சேய்க்குளம் அருகே மறித்து ஊர்வலமாக வந்தவர்களிடம், பேச்சு வார்த்தை நடத்தினர்.உடனே அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். அப்போது போலீசாருக்கும், வைஷ்ணவியின் உறவினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.ஆனால் தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவாா்த்தையின் உடன்பாடு ஏற்பட்டதன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்த நிலையில் அனுமதியின்றி ஊர்வலமாக சென்றதாக கூறி 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்