மதுரை
முறையாக குடியுரிமை பெறாத நிலையில்இலங்ைக பெண்ணிடம் இந்திய பாஸ்போர்ட்
|முறையாக இந்திய குடியுரிமை பெறாத நிலையில் இலங்கை பெண்ணுக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. அந்த பாஸ்போர்ட் மூலம் அவர் இலங்ைக செல்ல முயன்றபோது, மதுரை விமான நிலையத்தில் சிக்கினார்.
முறையாக இந்திய குடியுரிமை பெறாத நிலையில் இலங்கை பெண்ணுக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. அந்த பாஸ்போர்ட் மூலம் அவர் இலங்ைக செல்ல முயன்றபோது, மதுரை விமான நிலையத்தில் சிக்கினார்.
இலங்கை பெண்
மதுரையில் இருந்து தினமும் இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு விமானம் இயக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் இந்த விமானத்தில் கொழும்பு செல்ல பயணிகள் வந்தனர். அவர்களின் உடைமைகள், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, உமாவதி என்ற பெண்ணிடம் இந்திய பாஸ்போர்ட் இருந்தது. ஆனால், இலங்கை தமிழில் அவர் பேசியதால் அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்திய பாஸ்போர்ட்
விசாரணையில், அவர் மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்த பிரதாப்குமார் என்பவரை கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். மேலும், இலங்கை பாஸ்போர்ட்டில் இந்தியா வந்து, தனது திருமண பதிவை வைத்து ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவை பெற்று, அதன் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்றதாக கூறியுள்ளார். இதற்கிடையே அவர் முறைப்படி குடியுரிமை மனு அளித்து, இந்திய குடியுரிமை பெறாதது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, உமாவதியை விமான நிலைய குடியேற்றப்பிரிவு அதிகாரிகள், அவனியாபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நடவடிக்கையால் விமான நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.