< Back
மாநில செய்திகள்
திருமணமான 7 மாதத்தில்  இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தேனி
மாநில செய்திகள்

திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
11 Jun 2022 6:42 PM IST

திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

கூடலூர் 4-வது வார்டு மூனுசாமி கோவில்தெருவை சேர்ந்த சிங்கத்துரை மகன் ரவிக்குமார் (வயது 23). கூலித்தொழிலாளி. இவருக்கும், கம்பம் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த தர்மர் மகள் அர்ச்சனா (20) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் ரவிக்குமார் அர்ச்சனாவை சிகிச்சைக்காக கூடலூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார். பின்னர் அவரை ரவிக்குமார் வீட்டிற்கு அழைத்து வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அர்ச்சனா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் பிரியா கூடலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்