< Back
மாநில செய்திகள்
போக்குவரத்து தொழிலாளர்களின் போனஸ் தொகையில் பிடித்தம் - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர்களின் போனஸ் தொகையில் பிடித்தம் - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
11 Nov 2023 8:45 PM IST

ஊழியர்களின் ஒப்புதல் இன்றி போனஸ் தொகையில் பிடித்தம் செய்ய தடை விதிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

கோவை நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் தீபாவளி போனஸ் தொகையில் தொழிற்சங்கங்களுக்கான பணம் பிடித்தம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ஊழியர்களின் ஒப்புதல் இன்றி போனஸ் தொகையில் பிடித்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த மனு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கும், போக்குவரத்துக் கழகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.


மேலும் செய்திகள்