< Back
மாநில செய்திகள்
தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி

தினத்தந்தி
|
14 Jun 2023 11:49 PM IST

தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் ராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு வீரர்கள் வெற்றி பெற்றனர்.

ஜம்மு காஷ்மீரில் அனைத்து மாநிலங்களிடையேயான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா, மத்திய பிரதேசம், கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 616 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் இறகு பந்து போட்டியில் வென்று முதலிடத்தை பெற்றுள்ளதோடு 7 தங்கப்பதக்கம், 4 வெள்ளிப் பதக்கங்களை பெற்றுள்ளனர். அதேபோல் தடகள போட்டியில் ஒரு தங்கப்பதக்கம், 3 வெள்ளிப்பதக்கமும், ஒரு வெண்கல பதக்கமும் பெற்றுள்ளனர்.

போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்களுடன் ராணிப்பேட்டை திரும்பிய விளையாட்டு வீரர்கள் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். அப்பொழுது விளையாட்டு வீரர்களிடம் பேசிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, இன்னும் பல வெற்றிகளை பெற்று பல விருதுகளை வாங்க வேண்டும் வாழ்த்தினார். அப்போது பயிற்சியாளர்கள் சிவகுமார், தர்ஷன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்