< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
பிடாரியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா
|25 Aug 2023 12:52 AM IST
பிடாரியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா நடைபெற்றது.
கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் வில்லுனி ஆற்றங்கரையில் பிடாரியம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா நடந்தது. பனங்குளம் கிராம பெண்கள் குடங்களில் நெல் நிரப்பி தென்னம்பாளைகளை வைத்து அலங்காரம் செய்து வீட்டு வாசலில் பூஜை செய்தனர். பின்னர் தாரை தப்பட்டை முழங்க வாண வேடிக்கைகளுடன் ஊர்வலமாக தூக்கிச் சென்று பிடாரியம்மன் கோவிலில் வைத்து வழிபட்டு சென்றனர். இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.