< Back
மாநில செய்திகள்
தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ? என்ற பயத்தில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
சென்னை
மாநில செய்திகள்

'தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ?' என்ற பயத்தில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
25 Jun 2022 11:06 AM IST

திருவள்ளூர் அருகே தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ?' என்ற பயத்தில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கொட்டையூர் காலனி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பரந்தாமன். இவருடைய மகன் ஜானகிராமன் (வயது 17). இவர், திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கத்தில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 தேர்வு எழுதி உள்ளார்.

வருகிற 27-ந்தேதி பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியாக உள்ளது. தேர்வில் தான் தோல்வி அடைந்து விடுவோமோ? என ஜானகிராமன் மிகுந்த அச்சத்தில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தன் வீட்டின் அருகே உள்ள குளக்கரைக்கு சென்ற ஜானகிராமன், அங்கு இருந்த புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்