< Back
மாநில செய்திகள்
சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா?
விருதுநகர்
மாநில செய்திகள்

சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா?

தினத்தந்தி
|
21 Sept 2023 2:06 AM IST

சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் உள்ள சங்கம்பட்டி கிராமத்திலிருந்து ஆப்பனூர் வழியாக அழகாபுரி செல்லும் சாலை சேதமடைந்து இருந்தது. ஆதலால் இப்பகுதியில் புதிய சாலை போடுவதற்காக கற்கள் போடப்பட்டது. இதை சரி படுத்தாமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் இப்பகுதி வழியாக செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள், மில் தொழிலாளர்கள் என அனைவரும் சிரமப்படுகின்றனர். எனவே சாலை பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்