< Back
மாநில செய்திகள்
சாலை சீரமைக்கப்படுமா?
திருவாரூர்
மாநில செய்திகள்

சாலை சீரமைக்கப்படுமா?

தினத்தந்தி
|
20 Jun 2022 10:41 PM IST

சாலை சீரமைக்கப்படுமா?

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா முலழ்வாஞ்சேரி பகுதி ஆவிச்சாவடியில் உள்ள சாலை பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மண்பாதை போன்று காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

-பொதுமக்கள், வலங்கைமான்.

மேலும் செய்திகள்