< Back
மாநில செய்திகள்
குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
திருவாரூர்
மாநில செய்திகள்

குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

தினத்தந்தி
|
4 Jan 2023 12:15 AM IST

கூத்தாநல்லூர் அருகே குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

தென்கோவனூர் கிராமம்

கூத்தாநல்லூர் அருகே உள்ளது தென்கோவனூர் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து தென்கோவனூர், தட்டாங்கோவில் இணைப்பு சாலை உள்ளது.

இந்த சாலை மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கோட்டூர், வேதாரண்யம், திருவாரூர், முத்துப்பேட்டை, திருமக்கோட்டை, கூத்தாநல்லூர் போன்ற முக்கிய ஊர்களை இணைக்கும் முக்கிய வழித்தடத்தில் உள்ளது.

குண்டும், குழியுமான சாலை

இந்த சாலையை தென்கோவனூர், வடகோவனூர், திருராமேஸ்வரம், வாக்கோட்டை, ஓவர்ச்சேரி, தண்ணீர்குன்னம் மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இந்த சாலையில் கார், வேன், ஆட்டோ மற்றும் பள்ளி வாகனங்கள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.

இந்த சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலையில் ஆங்காங்கே ஜல்லிகற்கள் பெயர்ந்து குவியலாக கிடக்கிறது. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி தடுமாறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர்.

சீரமைக்க வேண்டும்

இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான தென்கோவனூர் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்