< Back
மாநில செய்திகள்
குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
கரூர்
மாநில செய்திகள்

குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

தினத்தந்தி
|
22 Nov 2022 12:02 AM IST

குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், சின்னதாராபுரம் அருகே தொக்குப்பட்டி என்னும் ஊர் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வேலைக்கு செல்ல வேண்டுமானால் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து அல்லது இருசக்கர வாகனங்கள் மூலம் சின்னதாராபுரம்-அரவக்குறிச்சி செல்லும் சாலை வரை வர வேண்டும். தற்போது அந்த தார் சாலை குண்டும், குழியுமாக, உள்ளது. இதனால் அவ்வப்போது பெயர்ந்த கற்களால் தட்டி விட்டு விபத்து நடந்து வருகிறது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தார் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்