மயிலாடுதுறை
குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
|சீவகசிந்தாமணி கிராமத்தில் உள்ள குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கடையூர்:
சீவகசிந்தாமணி கிராமத்தில் உள்ள குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குண்டும்,குழியுமான சாலை
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட சீவகசிந்தாமணி கிராமத்துக்கு செல்லும் தார்ச்சாலை உள்ளது. இந்த சாலையை அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் மேம்படுத்தப்படாமல் இருப்பதாக இந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தற்போது இந்த தார்ச்சாலை சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
சீரமைக்க வேண்டும்
குறிப்பாக சாலையில் கற்கள் பெயர்ந்து பள்ளங்களுடன் காட்சி அளிக்கிறது. சாலையில் கற்கள் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதால் இருசக்கர வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சராகின்றன.
சாலை சேதமடைந்து உள்ளதால் பள்ளி மாணவர்கள், விளைநிலங்களுக்கு வேளாண் இடுபொருட்கள் எடுத்து செல்லும் விவசாயிகள், வயதானவர்கள், பாதசாரிகள், வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
சாலை மிகவும் மோசமாக உள்ளதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.
எனவே இப்பகுதி மக்களின் நலன்கருதி ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறையினருக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.