< Back
மாநில செய்திகள்
புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வருமா?
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வருமா?

தினத்தந்தி
|
25 Sept 2023 12:15 AM IST

திருவாடானை தாலுகாவில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வருமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொண்டி

திருவாடானை தாலுகாவில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வருமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அங்கன்வாடி மையங்கள்

திருவாடானை தாலுகாவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 136 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான கிராமங்களில் அங்கன்வாடி மையங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் சேதம் அடைந்த நிலையில் தற்போது பல ஆண்டுகளாக வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகிறது. வாடகை கட்டிடங்களில் இயங்கும் பல மையங்கள் போதிய வசதியின்றி பாதுகாப்பற்ற முறையில் உள்ளது.

மேலும், பல கிராமங்களில் புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டுவதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னர் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு கீழ அரும்பூர் கிராமத்தில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 8 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போதுதான் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

இதேபோல் தினையத்தூர் கிராமத்தில் 2018-19-ம் நிதி ஆண்டில் அங்கன்வாடி மையம் புதிதாக கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்போதுதான் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு பணிகள் முடிவுக்கு வந்துள்ளது. ஓரியூர் கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளது. ஆனால் இந்த கட்டிடங்கள் அங்கன்வாடி மையங்கள் செயல்படுவதற்கு பயன்பாட்டிற்கு வரவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்