< Back
மாநில செய்திகள்
மானூர் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கப்படுமா?
விருதுநகர்
மாநில செய்திகள்

மானூர் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கப்படுமா?

தினத்தந்தி
|
22 July 2022 7:52 PM GMT

மானூர் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கும் பணி தொடங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தாயில்பட்டி,

மானூர் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கும் பணி தொடங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

குழாய் பதிக்கும் பணி

மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் வெம்பக்கோட்டையிலிருந்து சிவகாசிக்கு 15 கிலோமீட்டர் தூரம் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக சத்திரப்பட்டி, வன மூர்த்திலிங்காபுரம், வெம்பக்கோட்டை துணை மின் நிலையம் அருகே ஆகிய பகுதிகளில் குழாய்கள் வந்து இறக்கப்பட்டன. குழாய் வந்து இறக்கி வைக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் குழாய் பதிக்கும் பணி நடைபெறாமல் அப்படியே உள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் வெம்பக்கோட்டையில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம் மட்டுமே குழாய் பதிக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு மீண்டும் குழாய்கள் பதிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

நடவடிக்கை

இதனால் குழாய்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்ட மானூர் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கும் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி ெபாதுமக்கள் கூறியதாவது:-

வெம்பக்கோட்டையிலிருந்து சிவகாசி செல்லும் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பொருத்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இறக்கி வைக்கப்பட்ட குழாய்கள் இன்னும் பதிக்கப்படாமல் அப்படிேய கிடக்கிறது.

கூடுதல் தண்ணீர்

எனவே நிறுத்தப்பட்ட பணியை மீண்டும் தொடங்கினால் சிவகாசி மாநகராட்சி மக்களுக்கு கூடுதலாக தண்ணீர் கிடைக்கும்.

அத்துடன் வெம்பக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த மடத்துப்பட்டி, பேர்நாயக்கன்பட்டி, சத்திரப்பட்டி, கிராமங்களில் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குழாய்கள் இணைக்கப்படும். இதன் மூலம் எண்ணற்ற கிராம மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்