< Back
மாநில செய்திகள்
பூட்டி கிடக்கும் கால்நடை மருத்துவமனை திறக்கப்படுமா?
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

பூட்டி கிடக்கும் கால்நடை மருத்துவமனை திறக்கப்படுமா?

தினத்தந்தி
|
28 Sept 2023 11:39 PM IST

கந்தர்வகோட்டையில் பூட்டி கிடக்கும் கால்நடை மருத்துவமனையை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கால்நடை மருத்துவமனை

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் கால்நடை மருத்துவமனை சுமார் ரூ.60 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. ஆனால் இந்த மருத்துவமனைக்கு கால்நடை மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுநர், கால்நடை பராமரிப்பாளர்கள், உதவியாளர் என முழு நேர பணியாளர்கள் இல்லாமல் பல நாட்களாக பூட்டி கிடக்கிறது. இந்த நிலையில் இந்த கால்நடை மருத்துவமனைக்கு கந்தர்வகோட்டை நகரத்தில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான மாடுகள் மற்றும் ஆடுகள் உள்ளிட்ட ஏராளமான கால்நடைகளை சிகிச்சைக்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் இந்த நகரத்தை ஒட்டி உள்ள பல்வேறு கிராமத்தில் உள்ள கால்நடைகளையும், இந்த கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வருகின்றனர். ஆனால் இங்கு போதிய மருத்துவர்களும் பணியாளர்களும் இல்லாத காரணத்தினால் சிகிச்சை அளிக்க முடியாமல் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் தங்கள் கால்நடைகளை திரும்பி அழைத்து செல்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கந்தர்வகோட்டை கால்நடை மருத்துவமனையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மருத்துவமனைக்கு மருத்துவர்கள், பணியாளர்களையும் நியமிக்க வேண்டும் என்று கால்நடை வளர்ப்பவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்