< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
தார்ச்சாலை அமைத்து தரப்படுமா?
|20 May 2022 1:13 AM IST
தார்ச்சாலை அமைத்து தரப்படுமா?
தார்ச்சாலை அமைத்து தரப்படுமா?
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் சோழபுரம் அருகே உள்ள ராஜாங்க நல்லூர் தெரு உள்ளது. இந்த தெருவில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் இதுவரை சாலை வசதி செய்து தரப்படவில்லை. மழை பெய்து வருவதால் இந்த தெரு சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார்ச்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஜெய்கணேஷ், சோழபுரம்.