< Back
மாநில செய்திகள்
சேதமடைந்த பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா?
திருவாரூர்
மாநில செய்திகள்

சேதமடைந்த பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா?

தினத்தந்தி
|
12 Feb 2023 6:29 PM GMT

கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

பயணிகள் நிழலகம்

கூத்தாநல்லூர் அருகே, மன்னார்குடியில் இருந்து திருவாரூர் செல்லும் மரக்கடை வ.உ.சி.சாலை உள்ளது. இங்கு அப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்கு பயணிகள் நிழலகம் கட்டப்பட்டது.

இந்த பயணிகள் நிழலகத்தை கூத்தாநல்லூர், மன்னார்குடி, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரக்கூடிய மரக்கடை, கோரையாறு, குடிதாங்கிச்சேரி, வடபாதிமங்கலம், லெட்சுமாங்குடி, அதங்குடி மற்றும் அதனை சுற்றி உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-, மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

கான்கிரீட் கம்பிகள்

கடந்த சில ஆண்டுகளாக இந்த பயணிகள் நிழலகம் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த நிழலகத்தன் மேற்்கூரை மற்றும் அதன் சுற்று சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரிகிறது. மழை காலத்தில் மழை நீர் கட்டிடத்தின் உள்பகுதியில் புகுவதால், மழைகாலம் மற்றும் வெயில் காலங்களில் இந்த நிழலகம் சேதமடைந்து பயணிகள் நிழலகத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், சாலையோரங்களில் நீண்ட நேரம் நிற்க வேண்டி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்