திருவாரூர்
சேதமடைந்த சமுதாய கூட கட்டிடம் சீரமைக்கப்படுமா?
|சேதமடைந்த சமுதாய கூட கட்டிடம் சீரமைக்கப்படுமா?
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் அருகே சேகரையில் சேதமடைந்த சமுதாய கூட கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமுதாய கூடம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள சேகரையில் அந்த பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக சமுதாய கூடம் கட்டப்பட்டது. இந்த சமுதாய கூடத்தில் அந்த பகுதியில் உள்ள கிராமப்புற மக்கள் திருமணம், காதணி விழா மற்றும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக சமுதாய கூட கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் சிமெண்டு காரைகள் பெயர்ந்து, விரிசல்கள் ஏற்பட்டு உள்ளது. மழை தண்ணீர் உள்ளே சென்று கட்டிடம் சேதமடைந்துள்ளதால், இதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சீரமைக்க வேண்டும்
மேலும் கட்டிடத்தின் பின் பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூத்தாநல்லூர் அருகே சேகரையில் சேதமடைந்த சமுதாய கூட கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.